வடகிழக்கு இணைப்பை கருணா மற்றும் பிள்ளையான் ஏற்றுக்கொள்வார்களானால் அவர்களுடன் இணைந்து வேலை செய்ய தமிழ் தேசிய கூட்டமைப்பு தயார்

தமிழ் தேசிய கூட்டமைப்பு

வடகிழக்கு இணைப்பை கருணா மற்றும் பிள்ளையான் ஏற்றுக்கொள்வார்களானால் அவர்களுடன் இணைந்து வேலை செய்ய தமிழ் தேசிய கூட்டமைப்பு தயார்

வடகிழக்கு இணைப்பை கருணா மற்றும் பிள்ளையான் ஏற்றுக்கொள்வார்களானால் அவர்களுடன் இணைந்து வேலை செய்ய தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராகவுள்ளதாக கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்

மட்டக்களப்பு ஏறாவூர் நகரசபைக்கு எல்லை நகர் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து செவ்வாய்கிழமை (06) மாலை நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் – “கிழக்கு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என தையல் மெசின் சின்னத்திலும் படகு சின்னத்திலும் வருபவர்கள் தமிழ் மக்களின் வாக்குகளினைப் பிரிக்கவே வருகிறீர்கள்.

சிறுவயதிலே தமிழ் மக்களின் விடுதலைக்காக சிறுவயதிலே புத்தகப் பையை தூக்கி எறிந்து துப்பாக்கியை தூக்கி தமிழீழத்துக்காகப் போராடப் புறப்பட்டவர்கள்.

இந்த தமிழீழ கனவுக்காக நான்கு இலட்சத்துக்கு மேற்பட்ட உயிர்கள் நிர்கதியாக்கப்பட்டன. தமிழீழம் கிடைக்கவில்லை என்றால் இணைந்த வடகிழக்கிலே சகல அதிகாரங்களும் கொண்ட சுயாட்சியை தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தியை செய்யக் கூடிய சுயாட்சியை பெற்றுக்கொள்ள வேண்டாமா? இந்த எமது உறவுகளின் கனவு நனவாக வேண்டாமா?

இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்த வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து கிழக்கு பிரிவதற்குப் பச்சைக் கொடி காட்டினீர்கள். இது துரோகம் இல்லையா? உங்களை நம்பி வந்த இளைஞர் யுவதிகளுக்குப் பயிற்சி கொடுத்தீர்கள் புலிகளின் தாகம் தமீழ் தாயகம் என கற்றுக் கொடுத்தீர்கள். ஆனால் கிழக்கு மாகாணம் தனிமையில் இருப்பதற்கு நீங்கள் எல்லாம் விரும்புகின்றீர்கள்.

கிழக்கு மாகாணத்தின் குடிசனத்தொகை தெரியாமலா நீங்கள் எல்லாம் முதலமைச்சராகவும் பிரதியமைச்சராகவும் இருந்தீர்கள. அரசியல் அறிவு தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றி உங்களுக்குத் தெரியாதா?

வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பு தமிழ் மக்களின் எதிர்காலம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். என்ற கொள்கையுடன் வாருங்கள் நாங்கள் இணைந்து வேலை செய்வோம்.

கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேரவேண்டும் ஒன்றாக தேர்தலிலே நிற்க வேண்டும் அரசியல் பிரதிநிதித்துவம் காப்பாற்ற வேண்டும் என புத்திஜீவிகள் கூறுகின்றனர்.

நாங்கள் கடந்த காலங்களில் இழந்த இழப்புக்களுக்கு நிவாரணம் வேண்டும் எதிர்கால சந்ததியை இழக்க கூடாது. சிறுபான்மை இனமாக இருந்ததன் காரணமாகவே போராடினோம்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கு கிழக்கில் கை சின்னத்திலும் ஏனைய இடங்களில் வெற்றிலைச் சின்னம் என இரு முங்களை மக்களுக்கு காட்டுகின்றார்.

வெற்றிலை சின்னத்தை வட கிழக்கிற்கு கொண்டுவந்தால் இங்குள்ள தமிழ் – முஸ்லிம் மக்களுக்கு மஹிந்த ராஜபக்ஷ செய்த துரோகம் முள்ளிவாய்கால் அழிவு முஸ்லிம்கள் தாக்கப்பட்ட ஞாபகம் வரும் வெற்றிலைக்கு வாக்களிக்க மாட்டார்கள் என இங்கு கை சின்னத்தை கொண்டுவந்து எமது மக்களை ஏமாற்றுகின்றார்” என்றார’

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]