வங்கி கணக்கில் திடீரன்று பணமனுப்பிய விஜய்- கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதியுதவி

தமிழகத்தில் ஏற்பட்ட ‘கஜா’ புயல் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளன. புயல் மற்றும் கனமழை காரணமாக இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள்.

மக்கள் அனைவரும் நிவாரண முகாம்களின் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. வீடுகளை இழந்து தவித்து வரும் மக்களுக்கு, தமிழக அரசு ஒருபுறம் நிவாரணம் வழங்கிவந்தாலும், தன்னார்வலர்கள் மற்றும் இளைஞர்கள் முன்வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாகச் சென்று உதவிகள் வழங்கிவருகின்றனர்

அந்த வகையில் திரைப் பிரபலங்களும் டெல்டா மாவட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.இந்நிலையில் நடிகர் விஜய் தனது நற்பணி மன்றம் சார்பாக 7 மாவட்டங்களுக்கு 4 முதல் 5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

இதுகுறித்து கடலூர் மாவட்ட விஜய் மன்ற தலைவர் பேசுகையில், இன்று காலை என் வாங்கி கணக்கில் திடீரென்று 4.50 வந்திருந்தது. அதனை யார்,எதற்காக அனுப்பியுள்ளனர் என்று குழம்பி இருந்த நிலையில் பின்னர் அது சென்னையில் இருந்து விஜய் சார் மூலமாக வந்த பணம் என்பதும், அதனை காஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வுமாறு விஜய் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரியவந்தது. இதையடுத்து நாங்கள் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]