வங்கி கடன் வழங்க படுக்கைக்கு அழைத்த வங்கி மேலாளரை புரட்டி எடுத்த பெண்- வீடியோ உள்ளே

கர்நாடகாவில் வங்கி கடன் வழங்க படுக்கைக்கு அழைத்ததாக கூறி வங்கி மேலாளரை பெண் ஒருவர் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கர்நாடகாவில் உள்ள தேவனாகிரி என்ற பகுதியில் பெண் ஒருவர் 2 லட்சம் ரூபாய் கடன் கேட்டு வங்கி மேலாளரை அனுகியதாக தெரிகிறது. அப்போது கடன் வழங்க வேண்டும் என்றால் படுக்கையைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என மேலாளர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் சாலையில் வைத்து வங்கி மேலாளரை கட்டை மற்றும் காலணியால் தாக்கியுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]