வங்காளக் கடலுக்குச் சென்றிருந்த மீனவரைக் காணவில்லை

மீன்பிடிக்காக வாகரைப் பிரதேசத்தையொட்டிய வங்காளக் கடலுக்குச் சென்றிருந்த வேளையில் படகிலிருந்து தவறி கடலுக்குள் விழுந்த மீனவர் காணாமல் போயிருப்பதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிழமை 09.10.2018 இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் வாகரை – புளியங்கண்டலடி கிராமத்தைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை ரவிச்சந்திரன் (வயது 37) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே காணாமல் போயுள்ளார்.

இதுபற்றி பிரதேச மீனவர்களால் தங்களுக்கு அறிவிக்கப்பட்டதின் பேரில் தொடர்ந்து தேடுதல் இடம்பெற்று வருவதாக பிரதேச அனர்த்த நிவாரண சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜே. புவிதரன் தெரிவித்தார்.

இச்சம்பவம் பற்றி வாகரைப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]