வக்ப் சட்டம் தொடர்பான கருத்தரங்கு இன்று யாழ்ப்பாணம் பொது நூலகத்தில்

வக்ப் சட்டம் தொடர்பான கருத்தரங்கு இன்று யாழ்ப்பாணம் பொது நூலகத்தில்.

வக்ப் சட்டம்

வடமாகாண முஸ்லிம் பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கான வக்ப் சட்டம் தொடர்பான கருத்தரங்கு இன்று யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இடம்பெற்றது.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கருத்தரங்கு வடமாகாணத்தில் முன்னெடுக்கப்படுவது இதுவே முதல்தடவையாகும்.

வக்ப் சட்டம்

பள்ளிவாசல் நிர்வாகச்சட்டங்கள் மற்றும் நெறிமுறைகள் தொடர்பாக கருத்துரைகளை வளங்க முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க்.எம்.எச்.நூருல் அமீன் அவர்கள் வளவாளராக கலந்துகொண்டிருந்தார்.

மேலும் இக் கருத்தமர்வில் முல்லைத்தீவு ,கிளிநொச்சி,யாழ்ப்பாணம் பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]