லொறியுடன் மோதி பொலிஸ் கான்ஸ்டபிள் படுகாயம்

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிளொன்றுடன் லொறியுடன் நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளாகியதில், மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் படுகாயமடைந்துள்ளார்.

வெலிமடை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று முற்பகல், மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் கான்ஸ்டபிளாக சேவையாற்றுபவரே, விபத்துக்குள்ளானவராவார். இவர் வெலிமடையிலிருந்து கடமைக்கு செல்லும் போது, நுவரெலியாவிலிருந்து, வெலிமடையை நோக்கி வந்து கொண்டிருந்த லொறியுடன் நேருக்கு நேராக மோதியுள்ளார்.

வெலிமடைப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், லொறியின் சாரதியை கைதுசெய்துள்ளனர்.

விபத்தில் காயமுற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஆபத்தான நிலையில், வெலிமடை அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]