லொத்தர் விற்பனையாளர்களின் கருத்து அரசியல் சூழ்ச்சியின் பின்னணி.

 

லொத்தர் டிக்கட்டுக்களின் விலை இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 20 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட லொத்தர் டிக்கட்டின் விலை இன்று முதல் 30 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பில் லொத்தர் விற்பனையாளர்கள் சிலர் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். தாம் லொத்தர் விற்பனையிலிருந்து விலகப் போவதாகவும் அவரகள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.

மக்களின் நன்மை கருதியே லொத்தர் டிக்கட்டுக்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர், ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார். டிக்கட் விலை அதிகரிப்பிற்கு எதிராக எதிர்ப்பு போராட்டங்களை நடத்துபவர்கள் எவ்வித பேச்சுவார்த்தை குறித்தும் கோரிக்கை விடுக்கவில்லையென தெரிவித்த நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க விற்பனையாளர்களின் கருத்து அரசியல் சூழ்ச்சியின் பின்னணியாக இருக்கலாமென சந்தேகம் வெளியிட்டுள்ளார்.