முகப்பு Cinema லீக்கான சர்கார் Shooting Spot Stills- செம்ம மாஸா இருக்காரு இல்ல புகைப்படம் உள்ளே

லீக்கான சர்கார் Shooting Spot Stills- செம்ம மாஸா இருக்காரு இல்ல புகைப்படம் உள்ளே

இளையதளபதி விஜய் நடித்துள்ள “சர்கார் ” படத்திற்காக தான் விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகளே முடிவடையாத நிலையில் இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் துவங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் மற்றும் நடிகர் விஜய் மூன்றாவது முறையாக இந்த படத்தில் இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது. கடந்த ஜூன் 21 ஆம் தேதி இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியான பின்னர் “சர்கார் ” படத்தின் பீவர் ரசிகர்களை தொற்றிக் கொண்டுள்ளது.

இந்நிலையில் விஜய் ரசிகர்கள் கண்களுக்கு விருந்து படைக்கும் விதமாக தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட நடிகர் விஜய்யின் ஒரு சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த புகைப்படத்தில் நடிகர் விஜய் நீதிமன்றத்திற்கு எதிரில் கையில் ஒரு பைளுடன் யாரோ ஒருவருடன் போனில் பேசிக்கொண்டிருக்கிறார். இந்த புகைப்படங்களை படப்பிடிப்புகளை பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களில் யாராவது வெளியிட்டிருக்கலாம் எண்று எதிர்பார்க்கபடுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com