லிபியாவில் அகதிகள் படகு கவிழ்ந்தது: 35 பேர் பலி

வளைகுடா நாடுகளில் இருந்து உள்நாட்டு போர் மற்றும் தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக பலர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர். இவர்கள் மத்திய தரைக்கடலை கடந்து செல்வதற்கு முக்கிய இடமாக லிபியா உள்ளது.

லிபியாவில் இருந்து ஆட்கடத்தல் கும்பல்கள் மூலம் படகுகளில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்கின்றனர். சிறிய படகுகளில் அளவுக்கு அதிகமானோர் பயணம் மேற்கொள்வதால் கடலில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்படுவது தொடர் கதையாகிவிட்டது.

இந்நிலையில், லிபியா கடற்பகுதியில் அகதிகளை ஏற்றிச் சென்ற ரப்பர் படகு ஒன்று திடீரென மூழ்கியது. திரிபோலியில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் இந்த விபத்து ஏற்பட்டது. படகில் பயணித்த அகதிகள் கடலில் விழுந்து தத்தளித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த கடலோர காவல் படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். 10 மீன்பிடி படகுகளில் மீனவர்களும் மீட்பு பணிக்கு உதவினர்.

இதில், 18 பெண்கள் உள்ளிட்ட 85 பேர் மீட்கப்பட்டனர். 7 குழநதைகள் உள்ளிட்ட 35 பேரை காணவில்லை. அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. அவர்கள் அனேகமாக தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மீட்கப்பட்ட அகதிகள் நைஜிரியா, செனகல், கேமரூன், ஐவரி கோஸ்ட், கானா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]