லிந்துலை விபத்தில் பெண்கள் படுகாயம்

லிந்துலை விபத்தில்

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் படுகாயமடைந்துள்ளனர்.

லிந்துலை பெயார்வெல் பகுதியில் நேற்று இரவு 11 மணியளவில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி 300 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியது.

இதன்போது, அதில் பயணம் செய்த இரண்டு பேர் கடும் காயங்களுக்குள்ளாகி லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பிட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

ருவான்வெல்ல பகுதியிலிருந்து நுவரெலியா பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த வேனே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

சாரதி மற்றும் இரண்டு பெண்கள் பயணித்துள்ள நிலையில் இந்த விபத்தில் சாரதிக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை எனவும், இரண்டு யுவதிகளுக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்ததாகவும் லிந்துலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]