லிந்துலை தோட்ட குடியிருப்பில் தீ

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லோகி தோட்ட, கூமூட் பிரிவில் உள்ள குடியிருப்பில் நேற்று நள்ளிரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

20 வீடுகள் கொண்ட தொடர் லயக்குடியிருப்பில் காணப்படும் குறித்த வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து, வீட்டில் இருந்த 05 பேர், தற்காலிகமாக அயலவர்களின் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்ட போது வீட்டில் தாயும், மகனும் இருந்துள்ளதுடன், அயலவர்கள் இணைந்து அவர்களை காப்பாற்றியதுடன், ஏனைய வீடுகளுக்கு தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

வீட்டில் காணப்பட்ட வீட்டு உபகரணங்கள், ஆவணங்கள், தங்க நகைகள், உடுதுணிகள் உள்ளிட்டவை தீக்கிரையாகியுள்ளன.

தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு வந்த லிந்துலை பொலிஸார் தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]