லிஃப்டில் சிறுநீர் கழித்த சிறுவனுக்கு நேர்ந்த கதி- வீடியோ உள்ளே!!

பீய்ஜிங்: நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அறுக்கக் காத்திருக்கும்; செய்த வினை, அதே வடிவத்தில் திரும்ப வரும் என்பது போல் லிஃப்டில் சிறுநீர் கழித்த சிறுவனுக்கு உடனே தண்டனை கிடைத்த சம்பவம் சீனாவில் அரங்கேறியுள்ளது.

இந்த உலகம் நமக்கு மீண்டும், மீண்டும் கற்றுக் கொடுப்பது என்னவென்றால், நமது வாழ்க்கை என்பது கண்ணாடி போன்று நீ எதை காட்டுகிறாயோ அதையே தான் திரும்ப பெறுவாய். நீ நல்லது செய்தால் உனக்கு நல்லது கிடைக்கும் இல்லையேல் நீ செய்த தீங்கு உன்னை வந்து சேரும் என்பது தான்.

குழந்தை முதலே இது போன்ற நல்ல பழக்கவழக்கங்களை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்து வளர்த்தால் தான் அக்குழந்தை வளரும் போது யாருக்கும் எவ்வித தீங்கும் நினைக்காமல் வளரும். ஆனால், இந்த சிறுவனுக்கு அவனது பெற்றோர் எதை சொல்லி வளர்த்தார்கள் என்பது தெரியவில்லை. யாரும் பார்க்காத போது எது செய்தாலும் பரவாயில்லை என்று நினைத்துக் கொண்டு செய்பவர்களுக்கு இச்சிறுவனுக்கு நேர்ந்த சம்பவம் ஒரு உதாரணம்.

சீனாவின் சோங்கிங் நகரில் நடைபெற்ற இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து வைரலாகும் வீடியோவில், “லிஃப்டில் செல்லும் சிறுவன் ஒருவன், தன்னை யாரும் பார்க்கவில்லை என்று கருதி, தன்னுடையே பேண்ட்டை கழற்றி, லிஃப்டில் உள்ள பட்டன்கள் மீது சிறுநீர் கழிப்பது” போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

தொடர்ந்து, சிறுவன் இறங்க வேண்டிய தளம் வந்ததும் திறக்க வேண்டிய லிஃப்டின் கதவு திடீரென திறக்காமல் போக, சிறுவன் பதறியடித்துக் கொண்டு எந்த பட்டன் மீது சிறுநீர் கழித்தானோ அதே பட்டன் மீது கை வைத்து அழுத்துகிறான். உடனே அதில் தான் சிறுநீர் கழித்தது நினைவுக்கு வரவே தன்னுடையே கையை எடுத்து விடுகிறான். ஆனால், லிஃப்டில் எரிந்து கொண்டிருந்த விளக்குகள் தொடர்ந்து அனைய தொடங்குகின்றன. செய்வதறியாது திகைத்த சிறுவன் மீண்டும் லிஃப்டின் பட்டங்களை அழுத்துகிறான்.

 

லிஃப்டில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ள இந்த காட்சிகள, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், இந்த வீடியோ நகைச்சுவையாக உள்ளது சிரிப்பை அடக்க முடியவில்லை என சிலர் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

வேறு சிலரோ, மின்சார உபகரணங்கள் மீது நேரடியாக சிறுநீர் கழித்தால் அது ஆபத்து என்றும், அந்த உபகரணம் வேலை செய்யாமல் போய்விடும் என்றும் அறிவியல் ரீதியாக பேசுகின்றனர். குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை பெற்றோர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும் எனவும், சிறுவன் செய்த வினை, அவனை உடனே அறுத்து விட்டது எனவும் தங்களது கருத்துகளை நெட்டீசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]