லாஸ் வேகஸ் நகரில் பதட்டம் , 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

லாஸ் வேகஸ் நகரில் துப்பாக்கிச் சூட்டில்  குறைந்த பட்சம் 100 பேர் இறந்தனர், 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மாண்டலே பே சூதாட்ட விடுதியின் மேல் மாடியில் இருந்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக இந்த சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்துள்ளனர்.

லாஸ் வேகஸ்
லாஸ் வேகஸ்

64 வயதான ஸ்டீபன் பேடோக் என பெயரிடப்பட்ட துப்பாக்கி ஏந்தியவர், மண்டலாய் பே ஹோட்டலின் 32 வது மாடியில் இருந்து சரமாரியாக துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளார், பின்னர் அவர் பாதுகாப்பு பிரிவினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அமெரிக்க நேரப்படி இரவு 10.30 மணிக்கு நடந்த இந்த துப்பாக்கி சூட்டில் பலர் பலியாகி இருக்கக்கூடும் என்று தகவல்கள் கூறுகின்றன. சம்பவம் நடந்த இந்த இடத்தை தவிர்க்குமாறு மக்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.