லவர்சிலிப் தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்

நுவரெலியா மாநகர சபையுடன் மீண்டும் லவர்சிலிப் தோட்டத்தை உள்வாங்க வேண்டும் என கோரி, அத்தோட்ட மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டமானது நுவரெலியா பொரலந்த நகரத்தில் பதாதைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பியவாறு சுமார் ஒரு மணித்தியாலம் இடம்பெற்றது.

“உள்ளுராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணய விடயத்தில் நுவரெலியா மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியாக இருந்த லவர்சிலிப் சின்னகாடு தோட்டம், பிரதேச சபை எல்லைப்பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் இங்கு மாநகர சபைக்கு சேர்ந்து இருக்கப்பட வேண்டிய தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது.”என்று அந்த மக்கள் தெரிவித்தனர்.
Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]