லலித் அத்துலத்முதலியின் படுகொலை : நாளை வெளியாகிறது நூல்

லலித் அத்துலத்முதலியின் படுகொலை பற்றிய நூல் ஒன்று நாளை தடயவியல் நிபுணர் ரவீந்திர பெர்னான்டோ தலைமையில் வெளியிடப்படவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த லலித் அத்துலத் முதலி, ஜே.ஆர். ஜெயவர்த்தன அரசாங்கத்தில் பதில் பாதுகாப்பு மற்றும் தேசிய பந்தோபஸ்து அமைச்சராகப் பதவி வகித்தவர்.

முதலாம் கட்ட ஈழப்போரை ஒடுக்குவதில் முன்னின்று செயற்பட்ட இவர் பின்னர், ரணசிங்க பிரேமதாசவுடன் ஏற்பட்ட முரண்பாடுகளை அடுத்து, ஐதேகவில் இருந்து வெளியேற ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி என்ற கட்சியை உருவாக்கினார்.

1993ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், லலித் அத்துலத் முதலில் தேர்தல் பரப்புரையில் உரையாற்றிக் கொண்டிருந்த போது சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

இந்தப் படுகொலைக்கு விடுதலைப் புலிகளே காரணம் என்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட அதேவேளை, அப்போதை ஜனாதிபதியான பிரேமதாச மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இந்நிலையிலேயே அவரின் இறப்பு பற்றிய நூல் ஒன்று நாளை வெளிடப்படவுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]