லண்டன் குண்டு வெடிப்பில் இலங்கை பிரஜைகளுக்கு பாதிப்பில்லை – வெளிவிவகார அமைச்சு

பிரித்தானியாவின் மென்செஸ்டர் நகரில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் இலங்கை பிரஜைகள் எவருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவின் மன்செஸ்டர் அரினா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சியின்போது இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 22 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50 இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

லண்டன் குண்டு வெடிப்பில்

இந்தத் தாக்குதலுக்கு இலங்கை அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த குண்டு வெடிப்பில் இலங்கை பிரஜைகள் எவருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என்றும் வெளிவிவகார அமைச்சின் ஊடக பேச்சாளர் மஹிசினி கொலன்னே தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]