லண்டன் அருங்காட்சியகத்தில் கட்டப்பா சத்யராஜிற்கு மெழுகுச் சிலை!

எஸ்.எஸ் ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் பாகுபலி. இந்த படம் இரண்டு பகுதிகளாக வந்தது.

இப்படத்தின் முதல் பகுதியில் பாகுபலியை கட்டப்பாவாக நடித்திருந்த சத்யராஜ் கொல்வதாக அமைந்திருந்தது. இரண்டாவது பகுதியில் கட்டப்பா ஏன் பாகுபலியை கொஅலி செய்கிறார் என்பதை விளக்கும் விதமாக இருந்தது.

“பாகுபலி” படத்தின் வசூல் இந்திய அளவில் குறிப்பிடத்தகுந்த சாதனையை நிகழ்த்தியது. பாலிவுட்டில் உருவாகும் படங்கள்தான் இவை போன்ற சாதனைகளை இதற்கு முன் நிகழ்த்தி இருந்தன. அச்சாதனைகளை உடைத்த தென்னிந்திய படம் என்ற பெயர் ‘பாகுபலி’ க்குக் கிடைத்தது. இதனால் இப்படத்தில் நடித்த நடிகர்கலுக்கு நல்ல கவனம் கிடைத்தது.

இந்நிலையில் உலகப் புகழ்பெற்ற லண்டன் “மேடம் டுசாட்ஸ்” அருங்காட்சியகத்தில் பாகுபலி படத்தில் கட்டப்பா கதாபாத்திரத்தில் நடித்த சத்யராஜுக்கு ‘பாகுபலி’ கதாபாத்திர மெழுகுச் சிலை நிறுவப்படவுள்ளது. உலகின் செல்வாக்கு மிக்க கதாபாத்திரங்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும் இந்த அங்கீகாரம், இதற்கு முன்பு பிரபாஸின் பாகுபலி கதாபத்திரத்துக்கு கிடைத்தது. தற்போது கட்டப்பா கதாபாத்திரத்துக்கும் கிடைக்கவுள்ளது.

இந்த செய்தி அறிந்த தமிழ் திரையுலகினர், சத்யராஜுக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். மேலும் லண்டன் அருங்காட்சியகத்தில் வைக்கப்படட உள்ள முதல் தமிழனின் உருவ சிலை என்ற பெருமை நடிகர் சத்யராஜுக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]