முகப்பு News லசித் மலிங்கா வீட்டில் இந்திய கிரிக்கெட் அணியினருக்கு இரவு விருந்து உபசாரம்

லசித் மலிங்கா வீட்டில் இந்திய கிரிக்கெட் அணியினருக்கு இரவு விருந்து உபசாரம்

லசித் மலிங்கா வீட்டில் இந்திய கிரிக்கெட் அணியினருக்கு இரவு விருந்து உபசாரம்.

இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர், 3 டெஸ்ட் தொடர், 1 இருபதுக்கு இருப்பது போட்டி ஆகியவற்றில் விளையாடி வருக்கிறது. சொந்த மண்ணில் இலங்கையை புரட்டிப்போட்டிருக்கும் இந்திய அணி டெஸ்ட் தொடரை ஏற்கனவே 3-0 என இலங்கையை வைட் வாஷ் செய்தது.

5 போட்டிகளைக் கொண்ட தொடரை 4-0 என தொடரை கைப்பற்றியுள்ள நிலையில், 5வதும் இறுதியுமான போட்டியையும் வென்று ஒரு நாள் தொடரிலும் இலங்கையை வைட் வாஷ் செய்யும் முனைப்பில் உள்ளது இந்திய அணி.

இலங்கை அணியின் தற்காலிக கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான லசித் மலிங்கா தனது வீட்டில் இரு அணிகளுக்கும் இரவு விருந்தளித்தார். இவ்விருந்து உபசாரத்தில் கலந்து கொண்ட இந்திய வீரர்கள் எடுத்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார்கள்.

தவான் மற்றும் ரோஹித் ஷர்மா இலங்கை நண்பர்களுடனான விருந்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாக ட்விட்டரில் டுவிட் செய்துள்ளனர்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com