லசந்தவின் மகள் இலங்கை வந்தால் கொலையாளி யார் என்பதை கூறுவேன் – கோத்தா திட்டவட்ட அறிவிப்பு

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவை படுகொலை செய்தது யார் என்று தனக்குத் தெரியும் என்றும், ஆனால் அதற்கு ஆதாரம் இல்லை என்றும் இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிங்கள வாரஇதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

“லசந்த கொலையாளி யார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், எவரும் முறையான விசாரணைகளை நடத்தி குற்றவாளியைத் தண்டிக்கத் தயாராக இல்லை.

குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கு அரசாங்கத்துக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. அவர்கள் பொய் சொல்கிறார்கள்.

தனது தந்தையைக் கொலை செய்தவர் யார் என்று அறிய வேண்டுமானால், லசந்தவின் மகள் இலங்கை வந்து என்னைச் சந்திக்க வேண்டும். என்ன நடந்தது என்று நான் அவருக்கு கூறுவேன்.

ஆனால் அதனை நீதிமன்றத்தில் நிரூபிப்பதற்கு என்னிடம் ஆதாரம் இல்லை. அந்தக் கட்டத்திலேயே நாங்கள் விசாரணையை நிறுத்தினோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]