லங்கா சதொச விற்பனை நிலையங்களை அனைத்து பிரதேசங்களிலும் அமைக்க நடவடிக்கை

அனைத்து பிரதேசங்களிலும் லங்கா சதொச விற்பனை நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உயர்தரத்திலான உணவுப் பொருட்களை குறைந்த விலையில் பாவனையாளர்களுக்கு வழங்குவது இதன் நோக்கமாகும். இதற்கமைய, முதலாவது விற்பனை நிலையம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று மாலை கொஹுவல நகரில் திறந்து வைக்கப்பட்டது.

இதற்கிணைவாக இன்று நாடு பூராகவும் 52 விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. தற்பொது நாடு பூராகவும் 380 லங்கா சதொச நிலையங்கள் இயங்கி வருகின்றன.

இந்தவருடத்தில் இந்த எண்ணிக்கையை 500 வரை அதிகரிப்பது அரசாங்கத்தின் நோக்கம் என்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசார்ட் பதியுதின் தெரிவித்தார்.