“லங்கா இ நியூஸ் ஆசிரியரை நாடு கடத்துமாறு ஜனாதிபதி கோரவில்லை”

லங்கா இ நியூஸ் ஆசிரியர் பிரதீப் சந்துருவன் சேனாதீரவை, கைது செய்யுமாறு அல்லது இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறு பிரித்தானியத் தூதுவரிடம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கோரினார் என்று வெளியான செய்திகளை ஜனாதிபதி ஊடகப் பிரிவு மறுத்துள்ளது.

கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றில் வெளியான இந்தச் செய்தி பொய்யானது என்றும், ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டௌரிசுடனான சந்திப்பு மற்றும், லங்கா இ நியூஸ் ஆசிரியரை நாடு கடத்துவது அல்லது கைது செய்வது பற்றி வெளியான செய்திகள் பொய்யானது என்றும், அதில் கூறப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]