றோமன் கத்தோலிக்கம் அல்லாத கிறிஸ்தவர்களது சடலங்ளை அடக்கம் செய்வதற்கு காணி

மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் றோமன் கத்தோலிக்கம் அல்லாத கிறிஸ்தவர்களது சடலங்ளை அடக்கம் செய்வதற்கு இந்து மயானத்துக்கு அருகில் ஒரு ஏக்கர் காணி வழங்குவதற்கு கோறளைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.றோமன் கத்தோலிக்கம்

கோறளைப்பற்று வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோரின் இணைத்தலைமையில் இன்று (25) திங்கட்கிழமை வாகரைப் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்நடைபெற்றது.

வாகரைப் பிரதேசத்தில் றோமன் கத்தோலிக்கம் அல்லாத கிறிஸ்தவர்களது சடலங்ளை அடக்கம் செய்வதற்கு காணி ஒதுக்கீடு செய்வதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக உதவிப் பிரதேச செயலாளர் அருளானநடதம் அமலினி கூறினார்.

றோமன் கத்தோலிக்கம் அல்லாத கிறிஸ்தவர்களது சடலங்ளை அடக்கம் செய்வதற்கு வம்பிவட்டுவான் பகுதியில் காணி ஒதுக்கீடு செய்யப்பட்டது அந்த பகுதி மக்கள் காணி வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர் இந்த நிலையில் வாகரை இந்து மயானத்துக்கு அருகிலுள்ள ஒரு ஏக்கர் காணியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வாகரை இந்து மயானத்தின் காணி நிரம்பியதும் வேறு காணி வழங்க நடவடிக்கை யெடுக்கப்படும்.றோமன் கத்தோலிக்கம்

குறித்த காணியின் ஒரு பகுதியை பொலிஸார் பயன்படுத்தி வருகிறார்கள் இதனை பொலிஸார் விடுவிக்க வேண்டும். பொலிஸாருக்கு பொருத்தமான காணி வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]