றெஜினாவின் படுகொலையைக் கண்டித்து செங்கலடியில் கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணம் சுழிபுரம் பாடசாலை மாணவி றெஜினா படுnhகலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் கொலையாளிகளுக்கு தண்டனை வழங்குமாறு வலியுறுத்தி இன்று சனிக்கிழமை (30) செங்கலடி நகரில் கவனயீரப்பு போராட்டம் நடைபெற்றது.

முற்போக்கு இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் செங்கலடி எல்லை வீதியில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

றெஜினாவின் றெஜினாவின்

கவளனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டனவர்கள் காவல்துறையினரே கடமையில் ஈடுபடுங்கள், வேண்டும் வேண்டும் றெஜினாவுக்கு நீதி வேண்டும், அன்று வித்தியா சேயா இன்று றெஜினா நாளை?, நல்லாட்சி அரசே றெஜினாவின் படுகொலைக்கு நீதி வழங்கு, அரசே சிறுவர்களுக்கு பாதுகாப்பு இல்லையா, றெஜினாவின் படுகொலைக்கு தண்டனை வழங்கு, றெஜினாவின் படுகொலையை வன்மையாகக் கண்டிக்கிறோம், நல்லாட்சி அரசில் காவல்துறை தூங்குகின்றதா? போன்ற வாசகங்கள் எழுத்தப்பட்ட பதாதைகளை ஏந்தியவண்ணம் கோஷங்களையெழுப்பினர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]