ரோட்டில் குப்பை போட்டவரை விலாசி எடுத்த அனுஷ்கா- கோலி பகிர்ந்த வீடியோ வைரல்!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் காரில் சென்று கொண்டிருக்கும்போது ரோட்டில் மற்றொரு சொகுசு காரில் சென்ற ஒருவர் காரிலிருந்துகொண்டே ரோட்டில் குப்பைபோட்டுள்ளார்.

இதைக்கண்டு டென்ஷனான அனுஷ்கா, அவரின் காரை நிறுத்தி, பிளாஸ்டிக் குப்பை போட்டதற்காக திட்டினார். மேலும், ரோட்டில் இப்படி பிளாஸ்டிக்கையெல்லாம் போடவேண்டாமென்றும் குப்பைத் தொட்டியைப் பயன்படுத்துமாறும் கூறினார்.

இந்த சம்பவத்தை விடியோ எடுத்துள்ள கோலி, தனது மனைவியின் செயலைப் பாராட்டி அந்த விடியோவை பதிவிட்டுள்ளார்.

அவர் தனது டுவிட்டில் கூறியிருப்பதாவது,

“ரோட்டில் குப்பை போட்டவரை நியாயமாக கண்டித்துள்ளோம். சொகுசு காரில் சென்றால் மூளை இல்லாமல் போய்விடுமோ? இவர்களா நம் நாட்டை சுத்தமாக்கப்போகிறார்கள்? இதுபோல குப்பை போடுவதைக் கண்டால் விழிப்புணர்வு குரல் கொடுங்கள்” என்று கூறியுள்ளார்.

இந்த விடியோ பலரின் பாராட்டுகளைப் பெற்றதோடு, சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]