முகப்பு Cinema ‘ரெட்டி டைரி’ படத்தில் வீடியோ ஆதாரங்களை வெளியிட போவதாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஸ்ரீ ரெட்டி

‘ரெட்டி டைரி’ படத்தில் வீடியோ ஆதாரங்களை வெளியிட போவதாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஸ்ரீ ரெட்டி

சர்ச்சை நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. தெலுங்கில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ள இவர், சினிமா துறையில் வாய்ப்பு தருவதாக கூறி, தன்னை பலர் தவறாக உபயோகித்துக்கொண்டனர் என தெலுங்கு மற்றும் தமிழ் நடிகர்கள், இயக்குநர்கள் என பலர் மீதும் பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.

அடுக்கடுக்கான இவருடைய பாலியல் புகார்கள், திரைத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி ‘ரெட்டி டைரி’ என்ற புதிய தமிழ் படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தை அலாவுதீன் என்பவர் இயக்குகிறார்.

சித்திரை செல்வன் மற்றும் ரவிதேவன் ஆகியோர் இணைந்து இப் படத்தை தயாரிக்க இருக்கின்றனர். இப் படம் ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை போராட்டத்தை மையமாக வைத்து உருவாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து படம் குறித்து பேட்டி ஒன்றில் கூறிய நடிகை ஸ்ரீ ரெட்டி,

திரை பிரபலங்கள் மீதான எனது குற்றச்சாட்டுகள் தொடரும். என்னை ஏமாற்றியவர்களின் விடியோ ஆதாரங்களை சரியான நேரத்தில் வெளியிடுவேன்.

இப்படத்தை எடுக்க நடிகர் சங்கம் எனக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக கூறியுள்ளது. என்னிடம் உள்ள ஆதாரங்களை ‘ரெட்டி டைரி’ படம் மூலம் வெளியிடப்போகிறேன் என்று அதிரடியாக கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com