வடக்கு அரசியல்வாதிகளுக்கு சிங்கள பொலிஸாரே பாதுகாப்பு வழங்குகின்றனர்

“வடக்கு அரசியல்வாதிகள் தமிழ் பொலிஸாரின் பாதுகாப்பைப் பெறுவதற்கு தயங்குகின்றனர்” என்று வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

வடக்கில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளுக்கு சிங்களக் பொலிஸாரே பாதுகாப்பு அளித்து வருகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஊர்காவற்துறை- கரம்பனில் இருந்து, அனலைதீவு, எழுவைதீவுக்கான புதிய படகுச் சேவையை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிங்கள பொலிஸ் அதிகாரிகள் மீதே தமிழ் அரசியல்வாதிகள் நம்பிக்கை வைத்துள்ளனர்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]