‘ரெஜினா கசன்ட்ரா’வின் கசப்பான அனுபவம்

ரெஜினா கசன்ட்ரா

‘ரெஜினா கசன்ட்ரா’வின் கசப்பான அனுபவம்

‘கண்ட நாள் முதல்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ரெஜினா கசன்ட்ரா, அதனைத் தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், மாநகரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் படத்தில் நடித்துள்ளதுடன், சிலுக்குவார்பட்டி சிங்கம், நெஞ்சம் மறப்பதில்லை, பார்ட்டி ஆகிய படங்கள் அவரின் நடிப்பில் வெளிவரவுள்ள படங்களாகும். மற்றும் நவரச நாயகன் கார்த்தியின் மகன் கவுதம் கார்த்தியுடன் மிஸ்டர் சந்திர மௌலி எனும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

ரெஜினா கசன்ட்ரா

ரெஜினா தன் வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான சம்பவம் ஒன்றைத் தெரிவித்துள்ளார். இது பெரும் சர்ச்சையாக் கிளப்பியுள்ளது.

அவர் கூறியதாவது, சென்னையியிலுள்ள உள்ள ஈகா தியேட்டர் அருகே உள்ள பாலத்தின் வழியாக நண்பர்களுடன் நடந்து சென்றுகொண்டிருக்கும் போது திடீரென எதிரே வந்த இளைஞர் தன்னுடைய உதட்டை பிடித்துவிட்டதாகவும், அவனை நண்பர்களுடன் சேர்ந்து சரமாரியாக திட்டியதாகவும் தெரிவித்தார்.

இதனைப் போன்று பல தடவைகள் நடந்துள்ளதாக கண்ணீர் மல்க தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]