ரூனே சர்வதேச கால்பந்து உலகிற்கு விடைகொடுத்தார்

ரூனே சர்வதேச கால்பந்து உலகிற்கு விடைகொடுத்தார். சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் வெய்ன் ரூனே அறிவித்துள்ளார்.

ரூனே
wayne rooney

ரூனேவின் இந்த அறிவிப்பு அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.

சர்வதேச கால்பந்து போட்டிகளில் இங்கிலாந்து அணியின் முன்னணி வீரராக திகழ்பவரான வெய்ன்ரூனே, இங்கிலாந்து அணிக்காக அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராவார்.

31 வயதான ரூனே உள்ளூர் போட்டிகளில் எவர்டன் அணிக்காக கடந்த  2002-2004ல் விளையாடினார்.

பின்னர் பார்சிலோனா அணிக்காக 2004 – 2017ம் ஆண்டுவரை விளையாடினார். பார்சிலோனா அணியின் தலைவராகவும் பதவி வகித்தார். தற்போது அவர் எவர்டன் அணிக்காக மீண்டும் விளையாடி வருகிறார்.

ரூனே சர்வதேச
wayne rooney

இந்நிலையில், ரூனே சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.

இங்கிலாந்து அணி, அடுத்த மாதம், நடைபெற உள்ள உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில் விளையாட உள்ள நிலையில்,  ரூனே தமது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

அவரின் இந்த முடிவு இற்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

119 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள ரூனே, 53 கோல்கள் அடித்துள்ளார். அத்துடன், மான்செஸ்டர் அணிக்காக 2004 – 2017 ஆம் ஆண்டுவரை 183 கோல்கள் அடித்துள்ளார்.

இந்த நிலையில், தமது ஓய்வு குறித்து ரூனே செய்திக் குறிப்பொன்றில் கூறியிருப்பதாவது,

‘இந்த கடின முடிவை எனது குடும்பத்தினர், எவர்டன் அணி மேலாளர் மற்றும் நெருக்கமானவர்களுடன் கலந்து ஆலோசித்து எடுத்துள்ளேன்’ என ரூனே கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]