ரி20 கிரிக்கெட்டுக்கு விடைகொடுக்கும் மோர்தசா

ரி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து பங்களாதேஷ் அணியின் ரி20 மட்டும் ஒருநாள் அணித் தலைவர் மோர்தசா ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

வங்காள தேச ஒருநாள் மற்றும் ரி20 கிரிக்கெட் அணியின் தலைவராக இருப்பவர் மஷ்ரஃப் மோர்தசா. தற்போது வங்காள தேச அணி இலங்கைக்குச் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிந்துள்ள நிலையில் இரண்டு போட்டிகள் கொண்ட ரி20 கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. முதலாவது போட்டியில் இலங்கை வெற்றிபெற்றிருந்தது.

இந்நிலையில், நேற்றைய போட்டிதான் வங்காள தேச அணிக்காக நான் விளையாடும் கடைசி ரி20 கிரிக்கெட் தொடராகும். வங்காள தேச கிரிக்கெட் வாரியம், எனது குடும்பம், நண்பர்கள், அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

அதேபோல் கடந்த 1516 வருடங்களாக எனக்கு ஆதரவாக இருந்த ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதனால் மோர்தசா நாளை நடக்கும் 2ஆவது ரி20 கிரிக்கெட் போட்டியுடன் சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுகிறார். அதுதான் அவரது கடைசி ரி20 கிரிக்கெட் போட்டியாகும். அதன்பின் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மட்டுமே விளையாடுவார்.

33 வயதாகும் மோர்தசா இதுவரை 52 ரி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 368 ஓட்டங்களைச் சேர்த்ததுடன், 39 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]