ரிஷப ராசி அன்பர்களே சந்திராஷ்டமம் நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துப் போகுமாம்- 12 ராசிகளுக்குமான பொதுவான பலன்கள்

மேஷம்

மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம்உண்டாகும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள்.வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலி தமாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்து ழைப்பார். திடீர் திருப்பங்கள் நிறைந்தநாள்.

ரிஷபம்

ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துப் போகும். யதார்த் தமாக நீங்கள் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் அள வாகப் பழகுங்கள். போராடி வெல்லும் நாள்.

மிதுனம்

மிதுனம்: மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பழைய கடன் பிரச்னைகள்தீரும். தாய்வழியில் மதிக்கப்படுவீர்கள். வேற்றுமதத்தவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் எதிர் பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.

கடகம்

கடகம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப்புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக்கொள்வீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

சிம்மம்

சிம்மம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சிக்கன மாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களின் அன்புத்தொல்லை குறையும். வியாபாரம் செழிக்கும்.உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள் .

கன்னி

கன்னி: பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். தாய் வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். கலைப் பொருட்கள்வாங்குவீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். அலுவலகத்தில் நிம்மதி உண்டு. தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

துலாம்

துலாம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால்ஆதாயம் உண்டு. அதிகாரப்பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்கள் கருத் திற்கு ஆதரவுப் பெருகும். தைரியம் கூடும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும்.விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்கு வீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும்.உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப் பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.

தனுசு

தனுசு: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் மற்றவர்களைநம்பி பெரிய முடிவுகள் எடுக் காதீர்கள். சிலர் உங்களிடம் நயமாகப் பேசி னாலும் சொந்தவிஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகளை போராடிவசூலிப்பீர்கள். உத்யோகத்தில் எதிர் பார்த்தசலுகைகள் தாமதமாக கிடைக்கும். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

மகரம்

மகரம்: குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். உறவினர்,நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். செலவுகள் கட்டுக்கடங்காமல்போகும். வியாபாரத்தில் வேலையாட்களைஅனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். பொறு மைத் தேவைப்படும் நாள்.

கும்பம்

கும்பம்: அனுபவ பூர்வமாகவும், அறிவுப் பூர்வமாகவும் பேசிஎல்லோரையும் கவர்வீர்கள்.சொந்த-பந்தங்களின் சுயரூபத்தை அறிந்து கொள்வீர்கள்.பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள்.அரசால் அனுகூலம் உண்டு. வியாபா ரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் வரும். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.

மீனம்

மீனம்: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். உங் களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். சிந்தனை திறன் பெருகும் நாள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]