ரிப்பர் வாகனம் மோதியதில் மூதாட்டி ஸ்தலத்திலேயே மரணம்- சாரதி தப்பியோட்டம்

மட்டக்களப்பு – பதுளை வீதியை அண்டியுள்ள மரப்பாலம் எனுமிடத்தில் கட்டுப்பாட்டை இழந்து அதி வேகமாகச் சென்ற ரிப்பர் வாகனமொன்று மூதாட்டி மீது மோதியதில் அம்மூதாட்டி ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

வியாழக்கிழமை 19.07.2018 நண்பகலளவில் இடம்பெற்ற இத்துயரச் சம்பவத்தில் மரப்பாலததைச் செர்ந்த துரைச்சாமி தானி (வயது 72) எனும் மூதாட்டியெ உயிரிழந்துள்ளார்.

இதேவேளை விபத்தை ஏற்படுத்திய ரிப்பர் வாகனச் சாரதி தப்பியோடியபோது பொது மக்களால் துரத்திப் பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் பற்றி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டள்ளனர்.

ரிப்பர் வாகனம்

மூதாட்டியின் சடலம் உடலட கூறாய்வுக்காக கரடியனாறு பிரதேச வைத்தியாசலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]