ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 5 லட்சம் பெறுமதியான பீடி இலைகள் மீட்பு!

சுமார் 5 லட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு டன் பீடி இலையை சுங்கத்துறையினர் கைப்பற்றியுள்ளனர். தூத்துக்குடியில் இருந்து ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு கடத்தப்பட்ட போதே கைப்பற்றப்பட்டுள்ளது.

சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைய, சங்குமால் கடற்கரையில் சுங்கத்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் தூத்துக்குடியைச் சேர்ந்த வேல்முருகன், கார்த்தி என்பது தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணையில், தூத்துக்குடியில் இருந்து ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக பீடி இலைகளை மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்களிடமிருந்த பீடி இலைகளை சுங்கத் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதையடுத்து, கடத்தலில் ஈடுபட்டதாக இருவரையும் கைது செய்த ராமேஸ்வரம் பொலிஸார், இதில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியைத் தேடி தூத்துக்குடிக்கு  சென்றுள்ளனர். “பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளின் எடை ஒரு டன். இதன் மதிப்பு சுமார் 5 லட்சம் ரூபாய் இருக்கும்” என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]