ராணி முகர்ஜியின் 60 நாள் விளம்பர மாரத்தான்

‘ராணி முகர்ஜி’யின் 60 நாள் விளம்பர மாரத்தான்

பாலிவுட் நடிகை “ராணி முகர்ஜி” ஹிச்சி திரைப்படத்தை இரண்டு மாதம் விளம்பரம் செய்ய திட்டமிட்டுளார்.இத்திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய நம்பிக்கை அளித்துள்ளது.

“ராணி முகர்ஜி ” மிகச்சிறந்த நடிகை.எந்தவிதமான படத்தை தேர்ந்தெடுக்க வேண்டுமென்று அவருக்கு நன்கு தெரியும்.ராணி முகர்ஜியின் திரைப்படங்கள் வெளிவந்தால் நல்ல வரவேற்ப்பை பெரும் நிலையில் தற்போது ஹிச்சி படத்தில் சிறிது காலம் இடைவெளி விட்டு நடித்துள்ளார்.இப்படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தளிக்கும்.

ராணி முகர்ஜி இத்திரைப்படத்தில் ஒரு நரம்பு மண்டல கோளாறு, டூரெட்ஸ் நோய்க்குறியைக் கொண்டிருக்கும் “நைனா மாதுர் “எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார்.2008 ம் ஆண்டுவெளியான “ஹிக்கி பிராட் கோஹன்னின்” புகழ்பெற்ற “ஹால்மார்க்” தொலைக்காட்சி சுயசரிதையை அடிப்படையாகக் கொண்டது இத்திரைப்படம். ராணி முகர்ஜி “ஹிச்சி “படத்தை இரண்டு மாதங்களுக்குள் பரவலாக விளம்பர படுத்தவுள்ளார்.

ராணி முகர்ஜி தனது தாய்மை மற்றும் தொழில்ரீதியான கடமைகளை சமமான முறையில் 100 % செயல்படுத்த விரும்புகிறார். அவள் இரண்டு மாதங்களுக்கு படத்தை விளம்பரபடுத்திய பிறகு அவரது தாய்மைக் கடமைகளை செயல்படுத்த முழுமையாகத் திட்டமிட்டுள்ளார். ராணி தனது படத்தை நாடெங்கிலும் விளம்பரபடுத்த விரும்புகிறார்.

ராணி மீண்டும் நடிப்பதற்கு இத்திரைப்படத்தின் ஸ்கிரிப்ட் காரணமாக அமையும் என நம்புகிறார். ராணி பத்து நகரங்களில் சுற்றுப்பயணம் சென்று நாடு முழுவதும் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், குழந்தைகளிம் படத்தை விளம்பர படுத்த நடவடிக்கைகள் மேற்கொளள்வுள்ளார். வாழ்க்கையில் வெற்றி பெற சவால் நிறைந்த அழகிய செய்தியை முடிந்தவரை பல பார்வையாளர்களுக்கு காட்டவுள்து இத்திரைப்படம்

ஹிச்சி திரைப்படம் பிப்ரவரி 23 அன்று வெளியிடப்பட உள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]