“ராட்சசன் ” படத்தின் கிறிஸ்டோபர் யார் தெரியுமா? வெளியான புகைப்படம்

“ முண்டாசுப்பட்டி ” படத்தை தொடர்ந்து ராம் குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “ ராட்சசன் ”. தற்போது இந்த திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்தின் பெயர் கிறிஸ்டோபர். இந்த கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மனதில் தனியிடம் உண்டு. பலரும் அந்த கிறிஸ்டோபர் யார் என இணைய தளத்தில் தேடிக் கொண்டு இருந்தனர்.

சென்னையில் சமீபத்தில் நடந்த இப் படத்தின் 25வது நாள் வெற்றி விழாவில் கிறிஸ்டோபர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த சரவணன் என்பவரை அறிமுகம் செய்தனர்.

ஆனால், இப் படத்தில் சிறு வயது கிறிஸ்டோபராக நடித்தவர் யார் என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. ராட்சசன் படத்தின் உதவி இயக்குனர் சலீம் மூலம் ராட்சசன் படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

எந்த வித சினிமா பின்பலமும் இல்லாத இவர் மை டியர் பூதம் என்ற தொடரிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]