ராட்சசனில் மிரட்டும் கிறிஸ்டோபர் உருவானது இப்படிதான் – மேக்கிங் வீடியோ!

ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு நடிப்பில் அண்மையில் வெளியான படம் “ராட்சசன் ”. இத்திரைப்படம் 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

ஆக்ஷன் திரில்லர் படமாக உருவான இந்த படத்தின் வில்லன் கதாபாத்திரம் கிறிஸ்டோபர். இந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மறக்க முடியாத ஒரு தடத்தை ஏற்படுத்தி உள்ளது. பலரும் அந்த கிறிஸ்டோபர் யார் என்று இணையத்தளத்தில் தேடிக்கொண்டு இருந்தனர்.

இந்நிலையில் கிறிஸ்டோபர் யார் என்பதற்கான புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. சமீபத்தில் ராட்சசன் படத்தின் 25 வது நாள் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கிறிஸ்டோபறும் பங்கேற்றிருந்தனர். அவருடைய உண்மையான பெயர் சரவணன்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]