ராஜ்கிரணுக்காக பயங்கரமான தோற்றத்துக்கு மாறிய வரலட்சுமி

ராஜ்கிரணுக்காக பயங்கரமான தோற்றத்துக்கு மாறிய வரலட்சுமி

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் சண்டக்கோழி 2.

இதில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், வில்லியாக நடித்துள்ளார்.

அத்தோடு இப்படத்தில் மட்டுமல்லாது, சர்கார் படத்திலும், கீர்த்தி சுரேஷிற்கு வில்லியாக வரலட்சுமி நடித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதுகுறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ள வரலட்சுமி ‘இரண்டு படங்களில் நாங்கள் இணைந்து நடித்தாலும் இரண்டிலுமே எங்களுக்கு இணைந்து தோன்றும் காட்சிகள் இல்லை. கீர்த்தி சுரேஷ் மிக சிறந்த நடிகை. இன்னும் பல உயரங்களை தொடுவார்.

சண்டக்கோழி 2 படத்தில் ராஜ்கிரணோடு நடித்தபோது அவர் என்னை பார்த்து உன்னை பார்த்தால் வில்லி மாதிரியே தோன்றவில்லை. கல்லூரி மாணவி போல இருக்கிறாய் என்றார். இதை கேட்டதும் எனக்கு அதிர்ச்சி ஆனது. எடையை கூட்டி பார்க்க பயங்கரமான தோற்றத்துக்கு மாறினேன்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]