ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்க வேண்டும்; தமிழக அரசின் நிலைபாடு

இந்தியாவின் முன்னாள் பிதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நிலைபாடு என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், ‘ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுவிக்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நிலைபாடு.

தமிழக அரசின் நிலைப்பாட்டை உயர்நீதிமன்றத்தில் எடுத்துரைத்து வெற்றி காண்போம்.

அத்துடன், பேரறிவாளனின் தாய் அற்புதம்மாளின் வேதனையை தமிழ் அரசாங்கம் உணர்ந்துள்ளது’ என அவர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]