ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை அருகில் வெடிபொருட்கள்

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை அருகில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வாசலை ஒட்டியுள்ள சாலை ஓரத்தில் வெடிகுண்டு தெரியும்படி பேப்பரால் சுற்றப்பட்ட நிலையில ஒரு பொதி கிடப்பில் போடப்பட்டு இருந்தது.

இதனால் அச்சமடைந்த மக்கள் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் தெரிவிந்தனர்.

சம்பவ இடத்திற்கு மோப்பநாயுடன் வந்த வெடிகுண்டு நிபுணர்கள் குறித்த பொதியை பிரித்து ஆய்வு செய்ததை தொடர்ந்து, அதில் பாறைகளை தகர்க்க பயன்படுத்த கூடிய டெட்டனேட்டர் மருந்து குச்சிகள் மற்றும் பட்டாசு திரிகள் காணப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் மருத்துவமனை வாசலில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு, குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]