முன்னாள் ஜனாதிபதியை மீண்டும் அதிகாரத்திற்கு – ராஜித

முன்னாள் ஜனாதிபதியை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டுவருவற்கு சிலர் முயற்சிக்கின்றனர். இதற்காகவே அவர்கள் சைற்றம் எதிர்ப்பை பயன்படுத்துகிறார்கள் என்று அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

 

 

 

 

 

 

 

 

 

இந்த நெருக்கடிக்கு அரசாங்கம் தீர்வு வழங்கியுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பை அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

கண்டி தெல்தெனிய வைத்தியசாலையின் புதிய கட்டடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் அவர் உரையாற்றினார்.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அழுத்தங்களுக்கு அடிபணிய போவதில்லை என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறினார்.

அகிம்சைவாத தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்கியுள்ளார். புகையிலை, மருந்து விற்பனை நிறுவனங்கள் என்பனவற்றுக்கு எதிராக செயற்பட்ட தாம், மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு அடிபணிய தயார் இல்லை என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

நல்லாட்சி மக்களுக்காகவே உள்ளது என்று கூறிய அமைச்சர் மன்னரைப் போன்று செயற்பட்ட கடந்த கால ஆட்சியாளருக்கு பயந்து மறைந்திருந்தவர்கள் தற்போது, அரசாங்கத்திற்கு எதிர்ப்புக்களை வெளியிடுகிறார்கள் என்று குற்றம் சாட்டினார். நாட்டில் அழிவுகளை ஏற்படுத்தியவர்களுக்கு அதிகாரத்திற்கு வர இடமளிக்கப்பட மாட்டாது என்று அவர் வலியுறுத்தினார்.
ஜப்பானின் உதவியுடன் வறக்காப்பொல, தெல்தெனிய, கல்கமுவ, களுவாஞ்சிக்குடி ஆகிய வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]