ராஜாங்கனை குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு; விவசாய அமைப்பின் தலைவர் கைது

ஒருங்கிணைந்த விவசாய அமைப்பின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ராஜாங்கனை குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு வெளியிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒருங்கிணைந்த விவசாய அமைப்பின் தலைவரே இவ்வாறு இன்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அநுராதபுரம், தம்புத்தேகம நகரில் விவசாயிகள் ஒன்றுகூடி நேற்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, பொலிஸாரை தாக்கியமை மற்றும் நீதிமன்ற உத்தரவை மீறி கலகம் விளைவிக்கும் வகையில் செயற்பட்ட குற்றச்சாட்டில் 59 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 59 பேரில் 50 பேரை எதிர்வரும் 5ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு தம்புத்தேகம நீதவான் சமிலா நதிஷானி, நேற்றிரவு உத்தரவிட்டிருந்தார்.

2 பெண்கள் உள்ளிட்ட 50 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஆறு ஆண் மற்றும் மூன்று பெண்கள் ஆகியோர் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]