ராஜமெளலி இயக்கும் அடுத்த படம் – எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்!!

ராஜமெளலி இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘பாகுபலி’ படங்கள் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது. பல்வேறு சாதனைகளையும் படைத்தது. பாகுபலி முதல் மற்றும் இரண்டாவது பாகங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததால், ராஜமௌலி இயக்கும் அடுத்த படம் குறித்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்தது.

மேலும் பாகுபலி படத்தின் மூன்றாம் பாகம் உருவாக இயக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த தகவல் உறுதிப்படுத்தப்படாத நிலையில், ராஜமௌலி அடுத்ததாக ராம் சரண் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர்-ஐ வைத்து புதிய படம் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை தயாரிப்பாளர் டி.வி.வி.தனய்யா தயாரிக்க இருக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் துவங்கும் என்று கூறப்படும் நிலையில், ராஜமௌலி மற்றும் நாயகர்கள் இருவரும் ஐதராபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்படும்படியான புகைப்படும் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. படத்தின் போட்டோ ஷீட்டுக்காக ராம் சரண், ஜுனியர் என்.டி.ஆருடன், ராஜமௌலி அமெரிக்கா செல்லவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

மேலும் இந்த படத்தில் நாயகியாக நடிக்க சமந்தாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]