எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான `பாகுபலி 2′ திரைப்படம், திரையிடப்பட்ட இடங்கள் அனைத்திலும் நல்ல வசூலை குவித்தது. படத்தில் மிக பிரமாண்டமான காட்சிகளும், சிறப்பான ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்தது.
படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமண்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். உலக சினிமாவை திரும்பி பார்க்க வைத்த பெருமை `பாகுபலி 2′ படத்திற்கு உண்டு.
படம் இதுவரை ரூ.1700 கோடியை வசூல் செய்துள்ளது. படம் வெளிவந்து 3 மாதங்கள் ஆன நிலையில், படம் இயக்குவதற்கு சிறிய இடைவேளை விட்டிருந்த ராஜமவுலி, தற்போது தனது அடுத்த பட வேலைகளில் இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
ராஜமவுலி அடுத்ததாக இயக்கவுள்ள படத்திற்காக, தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இருந்து நாயகர்களை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. மேலும் படத்தினை மூன்று மொழிகளிலும் நேரடி படமாக எடுக்க திட்டமிட்டுள்ளாராம்.
இதற்கிடையில் படத்தின் நாயகன் யார் என்று சமூக வலைதளத்தில் மிக பெரிய மோதல்களும் நிகழ்கிறது. இதில் முக்கியமாக ஜுனியர் என்.டி.ஆர் ரசிகர்களும், மகேஷ் பாபு ரசிகர்களும் தங்களுடைய தலைவர் தான் அடுத்த படத்தில் நடிப்பதாக கூறி வருகின்றனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Website – www.universaltamil.comFacebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]