ராகுல் ப்ரீத்தை அடுத்து விஷாலை புறக்கணித்த அக்ஷரா ஹாஸன்!

 

 

உலக நாயகன் கமல் ஹாஸனின் இளைய மகள் அக்ஷரா விஷாலின் துப்பறிவாளன் படத்தில் இருந்து விலகியுள்ளார்.
மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படம் துப்பறிவாளன். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னர் டேட்ஸ் இல்லை என்று கூறி அவர் படத்தில் இருந்து வெளியேறினார்.

அதன் பிறகு அனு இமானுவேல் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆனார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமல் ஹாஸனின் இளைய மகள் அக்ஷராவை கேட்டனர். அவரும் நடிக்க சம்மதித்தார்.

அக்ஷரா தற்போது தல 57 படத்தில் நடித்து வருகிறார். அந்த பட வேலைகளே இன்னும் முடியாது இருப்பதனால் அவர் துப்பறிவாளன் படத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

இதையடுத்து அக்ஷராவுக்கு பதில் ஆண்ட்ரியாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். படத்தை விஷால் பிலிம் ஃபெக்டரி தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.