தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகினர் மீது அடுத்தடுத்து பாலியல் புகார்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வந்தவர் நடிகை ஸ்ரீரெட்டி. இவர், திரைத்துறையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை கூறிவந்தார்.

மேலும், பலரை கடுமையாக விமர்சித்ததுடன்,திரைப் பிரபலங்கள் சிலர் தன்னை படத்தில் நடிக்க வைப்பதாக கூறி, படுக்கை அறையில் மட்டுமே பயன்படுத்திவிட்டு, வாய்ப்பளிக்காமல் நழுவிச் சென்றதாக பலர் மீது அடுத்தடுத்து புகார் தெரிவித்து வந்தார்.

அந்த வகையில், ஸ்ரீரெட்டி தனது பட்டியலில் தமிழ் திரையுலகினரையும் விட்டுவைக்கவில்லை. முன்னணி இயக்குநர்கள் ஏ.ஆர். முருகதாஸ், ராகவா லாரன்ஸ், சுந்தர் சி, நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் மீது குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்த விவகாரத்தில் ஸ்ரீரெட்டிக்கு எதிராக பலரும் போர்க்கொடி தூக்கினர். இயக்குநர் வாராகி, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஸ்ரீரெட்டி மீது புகார் மனு அளித்தார்.

இதற்கிடையே, ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ், ஸ்ரீரெட்டி தனது நடிப்பு திறமையை, தன் முன்னரும் பத்திரிக்கையாளர்கள் முன்னரும் வெளிக்காட்டினால், அது இயக்குநர் என்ற ரீதியில் எனக்கு பிடித்திருந்தால் அவருக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு தருகிறேன் என்றார்.

மேலும், அவரின் குற்றச்சாட்டு மீது எனக்கு எந்த விதமான கோபமும் இல்லை என்று அதில் கூறியிருந்தார்.

லாரன்ஸ்-இன் அறிக்கைக்கு பதில் அளிக்கும் விதமாக, நடிகை ஸ்ரீரெட்டி இன்று தனது முகப்புத்தக பக்கத்தில், முகபாவனைகளை மாற்றி நடிக்கும் விதமாக நான்கு விடியோ காட்சிகளை பதிவேற்றியுள்ளார்.

அதில், இது லாரன்ஸ் மாஸ்டருக்காக என்று அவரைக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்த விடியோவைத் தொடர்ந்து தற்போது லாரன்ஸின் பதில் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]