ரஷ்ய தூதரகம் மீது கல்வீச்சு

ரஷ்ய தூதரகம்

கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகம் மீது நேற்று மாலை சரமாரியான கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த தாக்குதல் தொடர்பாக ரஷ்ய தூதரகத்தினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

எனினும், உயர்மட்ட உத்தரவின் பேரில், பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளது.

சம்பவம் நடந்த போது பதிவான கண்காணிப்பு காணொளிப் பதிவுகளை சமர்ப்பிக்குமாறு பொலிஸார் கோரியிருந்தனர்.

ஆனால், ரஷ்ய அதிகாரிகள் அந்தக் கோரிக்கையை நிராகரித்து விட்டனர் என்று கூறப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]