ரஷ்ய குழு இலங்கை வருகிறது

இலங்கை தேயிலையின் தரம் குறித்து ஆராய்வதற்காக ரஷ்யாவில் இருந்து விசேட குழு ஒன்று இலங்கை வரவுள்ளதாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

நான்கு பேர் கொண்ட இந்த குழு பெப்ரவரி மாதம் மூன்றாம் திகதி இலங்கை வரவுள்ளனர்.

இந்த குழுவில் ரஷ்ய அரசாங்கத்தின், தாவர பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரிகள் உள்ளடங்குகின்றனர்.

இலங்கையிலுள்ள துறைசார் அதிகாரிகளை சந்தித்து ரஷ்ய குழுவினர் கலந்துரையாடல்களை நடத்துவார்கள் என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.