43 ஆண்டுகளுக்கு பின்னர் அரச தலைவர் ஒருவர் ரஷ்யா செல்வது இதுவே முதலாவது சந்தர்ப்பம் ஆகும்.

ரஷ்யா
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் அழைப்பை ஏற்று நாளை ரஷ்யாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
1974ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்க ரஷ்யாவுக்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து இலங்கையின் அரச தலைவர் ஒருவர் ரஷ்யா செல்வது இதுவே முதலாவது சந்தர்ப்பம் ஆகும்.

இந்த விஜயத்தில் பலதுறை சார்ந்த உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள், விஞ்ஞானமும் தொழில்நுட்பமும், புதிய உற்பத்திகள், குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தல், கலாசாரம் முதலான துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கிலான உடன்படிக்கைகள் அவற்றில் அடங்கும்.

இரு நாடுகளுக்கிடையிலும் நட்புறவை வளர்த்து, பல்துறை சார்ந்து இருதரப்புகளும் அனுகூலம் பெறும் வகையில் தொடர்புகளை மேம்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் எற்படுத்தப்பட்டு 60 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு இடம்பெறும் நிகழ்வுகளிலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]