முகப்பு News ரஷ்யா விமான தீ விபத்தில் 18 பேர் படுகாயம்

ரஷ்யா விமான தீ விபத்தில் 18 பேர் படுகாயம்

ரஷ்யா விமான தீ விபத்தில் 18 பேர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், 164 பயணிகளுடன் பயணித்துள்ள ரஷ்யா விமானமொன்றே இன்று (சனிக்கிழமை) காலை தரையிறங்கும் வேளையில் தீப்பற்றியுள்ளது.

இது குறித்து ரஷ்ய சுகாதார அமைச்சு, 3 குழந்தைகள் உட்பட 18 பேர் இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவிலிருந்து பயணித்த குறித்த விமானமானது உதைர், சொச்சி நகர விமான நிலையத்தின் ஓடுபாதையில் தரையிறக்கும் போது, வேலியில் மோதுண்டு விமானத்தின் சில்லுப் பகுதி உடைந்துள்ளது.

மேலும் சில்லற்ற விமானமானது ஓடுபாதையில் பயணிக்க முடியாது தரையுடன் மோதி தீப்பற்றியுள்ளதுடன், அருகிலிருந்த ஆற்றுக்குள் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விமானம் தீப்பற்றியதால் விமானத்திலுள்ள தீயணைக்கும் வாயுக்கள் தானாகவே வெளியாகியுள்ளன.

எனினும் மொனோசைட் என்ற விஷ வாயுவை சுவாசித்ததால் 6 பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏனையோர் தீக்காயங்களுக்கு உள்ளாகியதாகவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

தீப்பற்றிய போதும், ஆற்றில் விமானம் விழுந்தமையால் பாரிய உயிர்ச்சேதம் தடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com