ரஷ்யாவுடன் இராணுவ ஒத்துழைப்பை விரிவாக்குவதில் இலங்கை ஆர்வம்

ரஷ்யாவுடன் இராணுவ ஒத்துழைப்பை விரிவாக்குவதில் இலங்கை ஆர்வம். ரஷ்யாவில் நடக்கும் ‘இராணுவம் – 2017’ என்ற சர்வதேச பாதுகாப்பு கண்காட்சி, அனைத்துலக ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் என்று இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கபில வைத்தியரத்ன தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுடன்
கபில வைத்தியரத்ன

‘இராணுவம் – 2017’ என்ற சர்வதேச இராணுவ – தொழில்நுட்ப கண்காட்சி, ரஷ்யாவின் அலபினோ இராணுவப் பயிற்சி மைதானம், குபின்கா விமான ஓடுதளம், தேசப்பற்று அவை மற்றும் மொஸ்கோ பிராந்திய கண்காட்சி மையம் ஆகியவற்றில் நேற்றுமுன்தினம்  ஆரம்பமானது.

உலகின் பல்வேறு நாடுகளின் பாதுகாப்பு குழுக்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளன. இலங்கை தரப்பு குழுவுக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலர் கபில வைத்தியரத்ன தலைமை தாங்குகிறார்.

கண்காட்சியில் பங்கேற்றுள்ள இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலர் ரஷ்யாவின் ஸ்புட்னிக் நாளிதழிடம் கருத்து வெளியிடுகையில்,
“ரஷ்யாவிடம் உள்ள ஆயுதங்களைப் பார்வையிடுவதற்காக வந்திருக்கிறோம். ரஷ்யாவிடம் ஆயுதங்களை வாங்கிய அனுபவம் இலங்கைக்கு உள்ளது.

ரஷ்யாவுடன்
கபில வைத்தியரத்ன

இங்கு வந்திருப்பது நல்ல வாய்ப்பாகும். இந்த கண்காட்சி மிகவும் சுவாரசியமாக உள்ளது. நாள் இதுவரை பார்த்திராத கேள்விப்பட்டிராத கண்காட்சியாக மட்டுமல்ல, நாம் சில அறிவுகளை பெற்றுக் கொள்ளவும், அனைத்துலக ஒத்துழைப்பை விரிவாக்கவும் இது உதவும்.

ரஷ்யாவின் போர்க்கப்பல்களில் இலங்கை ஆர்வம் கொண்டிருந்தது. அது தொடர்பாக கலந்துரையாடப்படுகிறது. இந்த நேரத்தில் நாங்கள் கப்பல்களை வாங்குகிறோம். அது பற்றிய பேச்சுக்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

தீவிரவாத முறியடிப்புத் தொடர்பாக, ரஷ்யாவின் அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளவும், ஏனைய நாடுகளிடம் பகிர்ந்து கொள்ளவும், அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளவும் இலங்கை விரும்புகின்றது” – என்று தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]