ரஷ்­யாவில் பனிக்­கட்டிப் படலத்தில் இருந்து 54 வெட்­டப்­பட்ட கைகள் மீட்பு!

ரஷ்­யாவில் காப்­ரோவஸ்க் என்ற பகு­தியில் இருந்த பனிக்­கட்டிப் படலத்தில் இருந்து 54 வெட்­டப்­பட்ட கைகள் எடுக்­கப்­பட்டுள்ளன.

ரஷ்­யாவின் சீன எல்­லையை ஒட்­டி­யுள்ள பகு­தியில் ஆமூர் ஆறு அமைந்­துள்­ளது. அங்கு நில­வி­வரும் கடும் குளிர் கார­ண­மாக அந்த ஆறு உறைந்து அதன் மீது பனிக்­கட்டி பட­லங்கள் படர்ந்­துள்­ளன. அந்தப் பனிக்­கட்டி பட­லத்தை கட்­டு­மான பணி ஒன்­றி­ருக்­காக கொஞ்சம் கொஞ்­ச­மாக வெட்டி எடுக்கப்பட்டுள்ளது.

அப்­போது அங்கு ஒரு பை கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. அந்தப் பையில் 54 வெட்­டப்­பட்ட கைகள் இருந்­துள்­ளன. அதா­வது 27 ஜோடி கைகள் கண்­டெ­டுக்­கப்­பட்­டன. இந்த 27 கைகளில் பல கைகளில் கைரேகை அழிக்­கப்­பட்டுள்ளது. இப்­போ­து­வரை ஒரே ஒரு கையில் மட்­டுமே கைரேகை கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­கி­றது.

இந்த கைகள் யாரு­டை­யன, ஏன் வெட்­டப்­பட்­டன என்று தெரி­ய­வில்லை. அதேபோல் இந்தக் கைகளை வெட்­டி­யது யார் என்ற விவ­ரமும் இது­வரை வெளி­யா­க­வில்லை. அது எந்தக் காலத்தில் வெட்­டப்­பட்­டது என்­பதும் கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை. ஆனால் அவை வெட்­டப்­பட்டு 20 ஆண்­டு­க­ளுக்கும் குறை­வா­கவே இருக்கும் என கூறப்­ப­டு­கி­றது.

தற்­போது அந்த கைகளை சோத­னைக்­காக கொண்டு சென்­றுள்­ளனர். இது­கு­றித்து பொலிஸார் விசா­ரணை நடத்தி வருகின்றனர். ஒரு கையில் இருக்கும் ரேகையை வைத்து ஏதாவது கண்டுபிடிக்க முடியுமா என்று சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]